விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் அமெரிக்காவே முன் நின்றது...! கொழும்புவில் அமெரிக்க தூதர் அறிவிப்பு..!

கொழும்பில் சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்சேல் சிசன் இவ்வாறு கூறினார்.

விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச ரீதியலான உதவிகள் தடைபட்டு அதை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. அதாவது அமெரிக்கா மட்டும் தடை செய்யவில்லை என்றால் விடுதலைப்புலிகளை அழித்திருக்க முடியாது என்றார்.

இந்த விசயங்களை கூறிவிட்டு இலங்கையில் பத்திரிக்கையாளர்கள் சுதந்திரம் இல்லை..லசந்தா முதல் உதயன் ஆரியர் ஞானசுதந்திரம் வரை பணியாற்ற முடியவில்லை என்று கூறிவிட்டு...போகிற போக்கில் மகிந்த ராஜபக்சே அரசுக்கு பதறிப்போய் எச்சரிக்கை ஒன்றை செய்துள்ளார் இவ்வாறு.

இலங்கையில் நடைபெற்ற போரில் போர்க்குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்காவிட்டால், தமிழர்கள் மீண்டும் ஆயுதம் தாங்கி போராடுவதை தடுக்க முடியாது என்று மகிந்த ராஜபக்சே அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று கருதலாமா...?

சீனா இந்தியா என்ற ஆசியாவின் மிகப்பெரிய ரவுடிகளை எதிர்க்க முடியாமலும், அதேசமயம் இவர்களிடம் பேரம் பேசி வெல்ல முடியாமல் அழுதும் புரண்டும் வருகிறதின் வெளிப்பாடுதான் இந்த அமெரிக்காவின் போர்க்குற்ற புலம்பல் என்று கருதலாம் என்கிறார்கள் அரசியல் நோக்க்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (27-Apr-13, 5:04 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே