வெட்கம் கெட்ட எருமமாடு

ஒரு ஊரில் வெட்கம் கெட்டஒரு எருமமாடு இருந்ததாம் ..அந்தமாட்டிற்கு என்று அந்த ஊரில் கவனிக்கும் உடைமையாளர் யாருமே இல்லை ... இருந்தாலும் பராவாயில்லை என்று அந்த ஊர் காரர்கள் அதற்க்கு தன வீட்டில் மீந்துபோன தண்ணியும் உணவும் கொடுத்தனர் ... அந்த வெட்கம் கெட்ட எருமமாடும் .. தினமும் சுவைத்தே வந்தது ..

இவ்வாறு நெடுநாளாய் தொடர்ந்து கொண்டிருந்தன . ஒரு நாள் அந்த வெட்கம் கெட்ட எருமமாடும் ....பக்கத்தில் உள்ள மற்ற வெட்கம் கெட்ட எருமமாடும் ..பேசிக்கொண்டது ... நமக்கு உணவளிப்பவர்கள் தற்போது நல்ல முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறார்கள் ... அதனால் நமக்கு வரும் உணவு சிக்கலில் முடிந்துவிடும் ... எனவே அவர்களை எப்படியாவது நம்காலடியில் இருக்க செய்யவேண்டும் . இல்லையென்றால் அவர்களை வம்பிழுத்து ஒழித்துவிட வேண்டும் ... என்று திட்டம் போட்டன ..
இதற்கு தக்க தருணத்தை அந்த வெட்கம்கெட்ட எரும மாடுகள் ஏற்படுத்த துவங்கின ... கூறுகெட்ட எரும மாடுகள் சேர்ந்து போட்ட திட்டம் ... நமக்கு உணவழிப்பவர்கள் அவர்களின் நண்பர்களிடம் மிகவும் நெருக்கமாக உள்ளார்கள் ... ஆனால் மிகவும் நல்லவர்கள் ... அதேநேரத்தில் அமைதியானவர்கள் ..அது போல் அவர்கள் நண்பர்களுமமைதியாகத்தான் இருப்பார்கள் ... எனவே அவர்களை ஒழிக்க ...உணவளிக்கும் அவர்களுக்கு பிடிக்காதது போல் நாம் நடக்க வேண்டும் ..அப்படியே உணவளித்தாலும் நாமக்கு ரசித்து ரூசிக்கும்படியாக இருந்தால்மட்டுமே உண்ணவேண்டும் .....உண்டுவிட்டும் விட்டுவிடாதே அவர்களை வம்பிழுக்க ஏடாகூடமாக பேசி வம்பிழு என்று அறிவுரையும் கூறிச்சென்றது .வெட்கம் கெட்ட எருமமாடும் மற்ற வெட்கம் கெட்ட எருமமாடும் சொன்னதை கேட்டு தலையாட்டியது .

அடுத்தநாள் அந்த வெட்கம் கெட்ட எருமமாட்டிற்கு அந்த ஊரிலுள்ளோர் உணவளித்தனர் .. உண்ட வெட்கம் கெட்ட எருமமாடும் இன்று நன்றாக இருந்த உணவை உண்டு விட்டு ..பேமானி,உனக்கெல்லாம் எதற்கு இந்த வேலை அதா எனக்கு உணவளிக்க ஊரில் பலபேர் இருக்கிறார்கள் நான் ஒன்றும் உங்களிடம் கேட்க்கவில்லையே என்று குத்தாட்டம் போட்டது ... ஊரார்கள் விடுவார்களா ..அட கிறுக்குபிடிச்ச வெட்கம் கெட்ட எருமமாடே இதுவரைக்கும் நாங்க போட்ட எச்சிய தானே சாப்பிட்ட இப்போ என்ன உனக்கு இவ்வளவு திமிர் என்றும் ..ஓஹு... கூட இருக்கும் மற்ற வெட்கம் கெட்ட எருமமாடும் சேர்ந்து போட்ட திட்டமா அடசீ .... என்று அனைவரும் சேர்ந்து புரட்டி எடுத்தனர் ..

இத்தனை அடிவாங்கியும் இன்னும் திருந்தாத அந்த வெட்கம் கெட்ட எரும மாட்டைப் பார்த்து நல்ல மாட்டிற்கு ஒரு சூடு .... சுரணையற்ற மாட்டிற்கு எத்தனை சூடுபோட்டாலும் தாங்கிக்கொள்ளும் அத வெட்கம் கெட்ட எரும மாடாசேன்னு ...யாருமே தண்ணியோ , உணவோ வைக்கவில்லை ...மாடும் திமிருடன் ஊரை வலம்வந்தது ... மாட்டிற்கு நல்ல பசி......... அத தினமும் தின்று கொழுத்தமாடாச்சே அதற்க்கு எந்த வெட்கமும் கிடையாதே ... மெதுவாக வந்து ஊராரிடம் சென்று மன்னிப்பு கேட்டது ... ஊராரோ சத்தமின்றி எட்டித்தள்ளினார்கள் ... யார் உன்னை இதை போல் இருக்க சொன்னதோ அந்த வெட்கம் கெட்ட எருமமாட்டிடமே சென்று சேர் என்று எட்டி மிதித்தனர் ... வெட்கம் கெட்ட எருமமாடும் வேதனையுடன் விலகிச் சென்றது .... ஊராரும் மகிழ்ந்தனர்... உறவுகளும்மகிழ்ன்தது... நண்பர்களும் நலமடைந்தனர்..


ஆனால் பழிவாங்கும் படலம் அதைவிட்டு விலகியதாக தெரியவில்லை .... உணவிட்டவரையே உரசிக் கொண்டிருக்கிறது ... ..ஆனால் பொறுமைக்குமொரு எல்லை உண்டு ... எட்டி மிதிக்கும்கால் ஒருநாள் சாகடித்துவிடும் .... வெட்கம் கெட்ட எருமமாட்டிற்கு புரிந்தால்சரி....

எழுதியவர் : bhanukl (28-Apr-13, 7:10 am)
பார்வை : 1006

மேலே