்்்் . எல்லாமே நட்பாலே . ்்்்

அன்னையென அரவணைப்பதும் அழகிய நட்பாலே

ஆன்றோர் ஆயிரமானதும் ஆழ்ந்த நட்பாலே

இன்னலிலும் இயங்கிடும் இன்னுயிர் இந்நட்பாலே

ஈட்டிடும் ஈகை ஈடாகா ஈழ நட்பாலே

உபகாரம் உய்வதும் உயிர் நட்பாலே

ஊனுடலை ஊருக்காக்கிடும் ஊர்ஜிதம் நட்பாலே

எண்ணியவெல்லாம எழுந்தது எழுத்து நட்பாலே

ஏழ்மை ஏற்றமாகிட ஏதுவானது ஏக நட்பாலே

ஐதீகம் அதிசயிக்கும் ஐயமில்லா நட்பாலே

ஒற்றவரும் ஒன்றாகி ஒருமித்ததோர் நட்பாலே

ஓபாமா ஓய்விலும் ஓங்காரமிடுவது நட்பாலே

ஔவை பௌவ்யததில் மிரளுவதும் நட்பாலே

ஃதுடையார் அருளுடையார் ஃதிலார் வாழ்ந்திலார்

எழுதியவர் : நெல்லை பாரதி (28-Apr-13, 6:22 pm)
பார்வை : 441

மேலே