படித்த பட்டதாரி ...................

படித்து முடித்து
பட்டம் பல வாங்கி
பாரினில் வாழ
பலவழி தேடி ...
வெற்றுக் காகிதமாய்
வீதியில் கிடந்தோம்,,,

வலியாய் நினைத்து
வீதியில் ஒதுங்க
இரையாவது நினைத்து
இதயம் துடித்தது

கலங்கிய கண்களும்
கடனாய் இடித்தது
நெருங்கிய இதயம்
நெருப்பாய் எரித்தது

பருந்தாய் கட்சிக்காரர்களும்
லஞ்சமாய் பதவிக்காரர்களும்
அறிவுரையாய் ஆசிரியர்களும்
பட்டத்தை பங்கிட நினைத்து
விட்டத்தை வட்டமிட்டு சென்றனர்

வேலைதான்
எங்களின் விடிவெள்ளியாம்
பெற்றோர்க்கு பெருமையாம்
சகோதரிக்கு சீதனமாம்
கல்யாண சந்தையில் காசாம்

ஆத்திரம் என்ற கையை கட்டி
ஆவேசம் என்ற வாயை பொத்தி
அட்டுழியம் என்ற கண்ணை மூடி
கடுஞ்சிறையில் தண்டனையாம்
கண்ணாடியறையில் வேலையாம் ...

முப்பொழுதும் கற்பனையேந்தி
முன்னுரையை தொடங்கும் நாளில்
பெற்றோராய் பரிதவிப்புகளும்
உறவினராய் உறுத்தல்களும்
சொந்தக்காரராய் சோகங்களும்
சகோதரியாய் சங்கடங்களும்
கேட்டே சலித்தே விட்டது
முன்னுரைக்கு முற்றுப்புள்ளியாய் .....

எழுதியவர் : bhanukl (28-Apr-13, 8:26 pm)
பார்வை : 178

மேலே