என்னோடு வா .......!!!!அழைக்கிறேன் ......... !!!!

தவிர்க்க முடியாமல் தவிக்கிறேன்....!
மறக்க முடியாமல் மறைக்கிறேன்...!
உனக்கு வேண்டி இருக்கிறேன்....!
உறக்கம் இல்லாமல் விழிக்கிறேன்...!
கனவில் உன்னுடன் வசிக்கிறேன்...!
உன் நினைவுகளையே தினம் புசிக்கிறேன்...!
நீ போகும் இடமெல்லாம் நடக்கிறேன் ...!
நீதானே என் பொன் வசந்தம் என நினைக்கிறேன் ...!
நிஜத்தோடு உனைச் சேர்க்கத் துடிக்கிறேன் ...!
நினைவோடு கறைவாயெனில் இறக்கிறேன் ...!
இது தான் உண்மை என உனக்குரைக்கிறேன் ...!
என்னோடு நீ வா என அழைக்கிறேன்.......!!!!!!!!!!!

எழுதியவர் : சிந்துமா (30-Apr-13, 10:59 am)
சேர்த்தது : sindhuma
பார்வை : 90

மேலே