சாதி கட்சிகளுக்கு

----சாதி கட்சிகளுக்கு----


வீட்டை எரிக்கிற சாதியும்
நாட்டை பிரிக்கிற மதமும்
எனக்கெதற்கு....

குடிசைகளை கொளுத்தும்
உங்கள் அரசியலை விட
எங்கள் இளைஞர்கள் காதல் ஒன்றும்
கேவலமானதில்லை.

என் சாதியை விட
பன்மடங்கு உயர்வானது
"தேவடியா பயலே" என்று
நண்பன் விளிப்பது...

சாதி வெறியோடு
வீட்டுக்குள் புகுந்து
என் தோழனை வெட்டுகிற
உங்களுக்கென்ன அருகதை இருக்கிறது
சிங்கள இனவெறி குறித்து
அரசியல் பேச....

ஒடுக்கப்படுவது உங்கள் இனமென்றால்
உடன் இருந்து போராடுவேன்...

இன்னொரு இனத்தை நசுக்கி
வாழும் இனம் நீங்களென்றால்
எதிராக நின்று களமாடுவேன்..

ஈழத்தில் அவிழ்த்துவிடப்பட்ட
அடக்குமுறைகளை கண்டு
கொதித்தெழுந்தவன் நான்...

இந்த மண்ணிலும் அது நிகழுமானால்

சமத்துவம் போதிக்காத
உங்கள் கொள்கையை
சாதி வெறியை தூண்டும்
உங்கள் நடத்தையை
அடியோடு அகற்ற
அணித்திரட்டுவேன்....

எச்சரிக்கை......

நீங்கள் ஒடுக்க முற்படுவது
தலித்தை அல்ல
தமிழனை...


---- தமிழ்தாசன் ----
29.04.2013

எழுதியவர் : தமிழ்தாசன் (30-Apr-13, 1:49 pm)
பார்வை : 157

மேலே