சுதந்திரமும் அரசியலும் பகுதி 4
சுதந்திரம்
கிடைத்து விட்டதா
நமக்கு?
தேடுகிறேன்
பள்ளிகளில்---
அரசுப் பணிகளில்--
எங்கே இருக்கிறது
சுதந்திரம்?
நான் மனிதன் என்று
சொல்லிக்கொள்ள முடியாத
சுதந்திரம்
ஏதாவது ஒரு விதத்தில்
ஏதாவது ஒரு சாதிக்குள்
ஏதாவது ஒரு மதத்திற்குள்
ஏதாவது ஒரு மொழிக்குள்
என்னை அடைத்து விடத்துடிக்கும்
நிர்வாகத்தில்
சான்றிதழ் பெறாவிட்டால்
முன்னுரிமை கிடையாது
என மறுக்கும்
பிரித்தாளும் நிர்வாகத்தில்
வோட்டளிக்கவில்லை எனில்
உன் பெயரில் கள்ள வோட்டு
இட்டுக்கொள்வோம்
என மிரட்டும்
அரசியல் கட்சிகளின் நடுவில்
திருநங்கைகளை
மனித குலத்தில் சேர்க்க
அனுமதிக்காத
சமுதாயத்தில்
தாழ்த்தப்பட்டவர்கள் என்று
இன்று வரை முத்திரை குத்தி
வோட்டு வங்கிகளை மட்டுமே
உருவாக்கி
பண உதவிகள் மறுக்கும்
வங்கிகள் பரந்து இருக்கும்
பொருளாதாரத்தில்
எனது பொருள்களின் விலையை
நானே
நிர்ணயிக்க முடியாத
உழவனாக உலவும்
நான்
அண்டை நாட்டால்
கட்டுப்படுத்தப்படும்
மீன்பிடித்தொழிலை கொண்ட
நான்
கல்லூரி படிப்பை முடித்த பிறகு
அந்த கல்லூரிக்கே அங்கீகாரம்
கிடையாது என அறிவிக்கும்
அரசாங்கம் கொண்ட நாட்டில்
உலக மயமாக்கலில்
அந்நிய நேரடி முதலீட்டால்
போட்டி எனும் பெயரால்
நசுக்கப்ப்டும் நான்
தேடுகிறேன் சுதந்திரத்தை!
.