காதல் தவிப்பு

சுத்தும் உலகம்
நிண்டு பார்க்குதடி
உன் விழியைத்தான்
சிறகுடைந்த விமானம்
எழுந்து பறக்குதடி
உன் இமைத்துடிப்பில்தான்
ஓடும் கங்கைநதியும்
தங்கி ஓடுதடி
உன் நீண்ட கூந்தலில் தானே

நிலவே தேயுதடி
உன் வட்ட முகம்
பாத்து பாத்து
விண்மீன்களும்
மறைந்து கொள்ளும்
நீ சிரிக்கும்
போது தெறிக்கும்
பல் ஒளியில் தானே

புல்லாங்குழல் உன்
சிரிப்புக்கே மயங்குதடி
உன் அங்கமெல்லாம் தங்கம்
தங்கமெல்லாம் என் இதழ் வண்ணம்
நயாகராவே அடம் பிடிக்குதடி
உன் மார்பு பள்ளங்களில்
குதித்து விளையாட

தென்றல் காற்றே சுத்தி தேடுதடி
உன் இடையில் அமர்ந்து இளைப்பாற
கடல் நீரே நன் நீராகும் .
உன் பாதம் பட்டு
மிரட்டும் அலையிலே
உன் முகம் தெரியுதடி
உன் மூச்சுக்காற்றில்
அடங்கிய பின்புதானே

நித்தம் எங்கு என் மனம்
தொலைவில் இருக்கும்
உன்னை எண்ணி எண்ணி
நீ தென்றலில்
தூது அனுப்புகிறாய்
அத் தென்றல் காற்றையே
சுவாசித்தே உயிர் வாழ்கிறேன்

என்றோ ஒருநாள்
என் வாழ்க்கை தேரிழுக்க நீ
வருவாய் என்று காத்துக்கிடக்கிறேன்

எழுதியவர் : பூவதி (1-May-13, 3:48 am)
சேர்த்தது : பூவதி
Tanglish : kaadhal thavippu
பார்வை : 140

மேலே