காத்தடிச்சி பறந்து போன பசுமை

காத்தடிச்சி காத்தடிச்சி
நா போறேன்
காடு மேடு கழனியெல்லாம்
சுத்தி வாறேன்

ஈ காக்கா எறும்புகூட
அங்கே இல்ல -இப்போ
எட்டிபாத்த நண்டு கூட
எலும்பா கிடக்குது

சுத்தி சுத்தி கீதம் சொன்ன
வண்ணத்து பூச்சி -இப்போ
எட்டி எட்டி என்னைவிட்டு
பறந்து போகுது

பாதம் வரை தொட்டு சென்ற
தண்ணிக் கூட -இப்போ
கானலாகி காணாம
கலைந்து போனது

வரப்போரம் மெத்தையான
புல்லுகூட - இப்போ
கூர்மையான கத்தியாக
கால கிழிக்குது

உழுது உழுது ஓடாய்போன
மாடெல்லாம் -இப்போ
அழுது அழுது தம் உசிர
போக்குது

ஓடி ஓடி வித்திட்ட எங்கள்
விவசாயி - இப்போ
வாடி வாடி வறுமையில
வற்றி போறான்

நம்பி நம்பி வந்த சொந்தம் நகர்ந்தாச்சி
தும்பி போல நானும் இப்போ வெம்பினேனே
மழைகூட மண்ணதனை மறந்தாச்சி
அலைபோல நானும் இப்போ அலைந்தேனே
+++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : bhanukl (1-May-13, 11:04 am)
பார்வை : 158

மேலே