உடலினைப் போற்றுவோம் [2]

பித்தப் பை [gall blader]குறித்த சிறு விளக்கம்.
*************************************************************

[அபி ஐயா அவர்களின் "6.கானலைத் தேடி..!- 29.4.13..."
பதிவிற்கு நான் அளித்த தகவலை எடுத்து எனது பக்கத்தில் பதிவு செய்கிறேன்]

உடலே ஒரு அதிசயம் தான். நாம் அதன் அருமைகளை பெருமைகளை அறிந்து கொள்ள நினைப்பதே இல்லை. உடம்புக்கு எதாவது தொந்தரவு வந்தால்தான்., என்ன பிரச்சனை அது எந்த உறுப்பை பாதிக்கிறது என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்கிறோம்.

பிரபஞ்சத்தில் எப்படி பஞ்ச பூத சக்தி நிதர்சனமானதோ அதே போன்று நமது உடலிலும் பஞ்ச பூத சக்திகளே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை படித்திருக்கிறோம். உணர்ந்திருக்கிறோம். அந்த சக்திகளே நமது உடம்பை இயக்குகிறது.

இதில் ஒரு அம்சமாக., ஆகாயத்தை எடுத்துக் கொண்டால், அந்த ஆகயத்தில் தான் கல்லீரலும் பித்தப் பையும் அங்கம் வகிக்கின்றன. கல்லீரலில் கிடைக்கும் ஒரு வித திரவ சுரப்பியை [என்சைம்] பித்தப்பை பெற்று சேமித்துக் கொள்கிறது. அந்த சுரப்பிதான் உணவு செரிமானத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த திரவ சுரப்பியின் நீர்த்த மற்றும் இறுகிய தன்மைகள் தான் பல விளைவுகளை குடலிலும் வயிற்றிலும் ஏற்படுத்துகிறது. அல்சர் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்குகின்றன.

இந்த சுரப்பி சரியான பக்குவத்தில் இல்லாமையை உருவாக்குவது நமது வேளைதான். அதாவது நமது கெட்ட உணவுப் பழக்கம்., உண்ணும் நேரத்தை அடிக்கடி மாற்றுவது அல்லது பல நேரங்களில் உண்ணாமல் இருப்பது கடையில் விற்கும் உணவுப் பொருட்கள் மற்றும் மசலாப் பொருட்கள் போன்றவை தான் காரணம்.

இதனால் பித்தப் பையில் கல் உருவாகிறது. அவதிப் படுகிறோம் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலைக்கும் வந்து விடுகிறோம்.

பித்தப்பை பாதிப்பின் அறிகுறிகளாக தலைவலி., கண்வலி., அல்சர்., காமாலை., போன்றவை தென்படும்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால்., இத்தனை விளக்கங்களும் பித்தபையின் அறிகுறிகளும் அதற்குண்டான எளிய மருத்துவ முறைகளையும் அலோபதி மருத்துவம் சொல்லவில்லை. நமது பாட்டன் பூட்டன் சொன்ன அறிவியல் பூர்வ இயற்கை மருத்துவ முறைகளில் சொல்லப் பட்டிருக்கிறது இயற்கையான உணவு முறை மற்றும் "உடலை போற்றுதல்" இல்லாமையே நோய்களையும் உற்பத்தி செய்கிறது. அலோபதி மருந்துகளும் நமக்கு அடுத்த ஒரு நோயை உருவாக்க காரணமாக அமைகிறது.

உடல் ஒரு அதிசயம். அதில் எதாவது ஒரு உறுப்பு பழுதடையும் போதுதான் அதன் அருமையை அறிவோம்.


கருத்து
*********
pollachi abi 01-May-2013 6:05 pm

உங்கள் அருமையான தகவலுக்கு மிக்க நன்றிகள் தோழர் ரத்தின மூர்த்தி அவர்களே.. ! மிக்க நன்றி..!
அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (2-May-13, 10:26 am)
பார்வை : 100

மேலே