வாழ்வதும் பிழைப்பதும் 14

வீட்டில் பாட்டு
பாடுவேன் -அம்மா
திட்டுவார்கள்
எப்ப பாரு பாட்டு
உருப்பட மாட்டியா
பொழைக்கிற வழிய பாருடா
.
வீட்டில் படம்
வரைவேன் -அம்மா
திட்டுவாங்க
எப்ப பாரு ஓவியம்
உருப்பட மாட்டியா பொழைக்கிற வழிய பாருடா.
.
கால் காசுக்கு
துப்பு இல்ல.
கலையாவது
மண்ணாவது.
.
காசு தேவை
காசு தேவை
.
கீழ்மைத் தொழில்கள்
பல செய்தேன்.
காசு கொட்டியது.
பணக்காரனாகி
பஞ்சாயத்து செய்தேன்.
அரசியலில் இறங்கி
ஆட்சி செய்தேன்.
.
அம்மா சொன்னாங்க என்
புள்ள பெரிய
புள்ளி ஆய்ட்டான்.
பொழைக்கிற வழியை புரிந்துக்கொண்டான்.
.
ஆமாம்
உண்மைதான்
வாழும் வழி வேறு
பிழைக்கும் வழி வேறு.
.
யோகராணி.ரூ
.
(பி.கு பணமதிப்புக்கு
பண்டமாற்றம்
செய்ய முடியாத
திறமைகள் அணைத்தும்
மதிக்கப்படுவதில்லை
மக்களால்)

எழுதியவர் : யோகராணி.ரூ (2-May-13, 10:09 pm)
பார்வை : 84

மேலே