எதனாலன்னு புரியல ...
குடும்ப பாரம் சுமக்க
நாங்க தயங்கல...
ஏட்டுப் படிப்ப எங்க ஆதாரமா
நீங்க நினைக்கல...
இலவச கல்வித் திட்டம்
வந்தும் இலவச மதிய உணவு
திட்டம் இருந்தும்
படிக்க வைக்க அனுப்பாம
கல்லுடைக்கவு(ம்)
தீப்பெட்டி ஒட்டவு(ம்)
மண் சுமக்கவுமா அனுப்பி
மொட்டுலேயே மலர் வாடனுமுன்னா
கல்யாணம் பண்ணி குடும்பத்த
பெருக்குரீக ....பிஞ்சுலேயே பழுத்து
நொந்து நூலாக நூல் எடுத்துப் படிக்கத்
தெரியா தற்குறியா கெடந்து சாகட்டுமுன்னு
நினைத்தா வாழ்க்கைய துவங்குநீங்க ...
எதனாலன்னு புரியல நாங்க
பிஞ்சுலேயே உழைக்கிறதால
எங்க கல்விஅறிவுக் கண்ணும் தெறக்கல
குடும்பவறுமைக் கோலமும் குறையல...!!...
--- நாகினி