சுதந்திரமும் அரசியலும் பகுதி 7

ஏனெனில்
வியாயாரியை எவரும்
வெறுப்பத்தில்லை

வியாபாரம்-
லாப நோக்கில் செய்யும்
செயல்பாடுகள்,

அது
சமூக அங்கீகாரம் பெற்றது

அரசியலில்
பொருள் செலவழித்திருப்பது
அங்கீகரிகப்பட்ட சங்கதி.

அரசியல் ஆதாயம்
புகழ் ஈட்டல்
அங்கீகரிகப்பட்ட சங்கதி.

இதுவரை அனைத்துமே
நேர்த்தியான எண்ணங்களே.

அரசியல் ஆதாயத்தில்
பிறர் களங்கம் -தமது உரிமை
எனும் புரிதல்
பேதமையே
திசை திருப்பப் புள்ளி.

அரசியலில்
தரம் கெட வழிவகுக்கும்
ஒரு புரிதல்.

சுயநலம், சுயலாபநோக்கு,
அனைத்து மனிதரிடமும் உள்ள
ஓர் இயல்பு.
சகிக்கத்தக்கவையே,.

பிறர் களங்கம்,
பிறரை இழிவுபடுத்தும் உரிமை
எவராலும்
அங்கீகரிக்கப்படாத செயல்

அரசியல்வாதி அதை செய்து
வழிகாட்டும் போது
மக்களும் அவ்வழியே
ஊடகங்களின் மூலம்.

தொடர்கிறது
தரங்கெட்டத்தனம்
விரிகிறது சாக்கடையின்
துர்நாற்றம்.

ஏனிந்த திசை மாற்றம்?

தம் திறமையால்
முன்னேற முடியாத
தனிமனித சிந்தனை,

பிறரை தரம் தாழ்த்தி
முன்னேறும் கோட்பாட்டை
முன் நிறுத்தி
நியாயப்படுத்துகிறது

அதில் தனது ஆத்திரத்தை
துணைக்கழைத்து
குறுக்கு வழிகளை
நியாயப்படுத்துகிறது

பழிவாங்கும் படலம்
தொடர தரங்கெட்டத்தனம்
தொடங்குகிறது.

அந்த புரிதலின் பேதமையே
அரசியலில்
தரங்கெட்டத்தனத்தின்
தொடக்கம்.


தொடரும்.......................

எழுதியவர் : மங்காத்தா (7-May-13, 1:18 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 41

மேலே