வாழ்க்கை

அகம் புறம் அனைத்தும்
மகிழ்வூட்டுவது வாழ்க்கையா?
ஆசைகளை அடைவதற்கு
அயராது உழைப்பது வாழ்க்கையா?
அயலான் வியந்து
பாராட்டு பெறுவதற்கு வாழ்வது வாழ்க்கையா?
உடன்பிறந்தோர்களை
உற்று நோக்கச் செய்வது வாழ்க்கையா?
சுயநலத்துக்காக அடுத்தவன்
சுதந்திரத்தை பறிப்பது வாழ்க்கையா?
உயிர் வாழ்வதற்கு மட்டும்
உண்ணுவிட்டு ஊர்வம்பு
வளர்த்து வாழ்வது வாழ்க்கையா?
முரட்டுத்தனத்தால் மற்றவர்களை
மிரட்டி வாழ்வது வாழ்க்கையா?
மூன்று வேலையும்
மூக்கு பிடிக்க சாப்பிடுவது வாழ்க்கையா?
வாழ்க்கையென்றால் என்ன?
வாழ்க்கை எப்பொழுது ஆரம்பிக்கிறது?
எப்பொழுதும் சுயமாக சிந்தித்து
சம்பாதித்து ஓர் குறிக்கோளுடன்
வாழ்வது வாழ்க்கை...
-- அடிபணியாதே
-- ஆசைபடாதே
-- ஆழ்ந்து யோசி
-- அகிலமும் உன் வசம்
-- பிறரை புண் படுத்தாதே
-- போராடு உன் குறிக்கோளுக்காக
வாழ்க்கை = வாழ் + உன் + கையில்
வாழ் ! பிறருக்கு வழிகாட்டு !