.............நீ வேண்டாம்..........

உனை கூடமறுக்கும் மூடமனது என்னுடையது !
கூடுவிட்டுக்கூடுபாயும் உன்னிடம்,
கேடுகெட்டுத் தோற்பதுவே என் வாடிக்கையா?
தேடி அடையவிரும்புகிறேன் ஒரு தனிமை !
அங்கே ஓடிவரக்கூடாது உன் நினைவு !
தோல்விதந்து பெரும் சோகத்தில்ஆழ்த்தி !
எனை உன்மடிசாய்த்து கேலிக்குரியவள் ஆக்காமலிருக்க !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-May-13, 9:06 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 98

மேலே