இருந்தாலும் தொல்லை, இறந்தாலும் தொல்லை

நான் ஒரு அரசியல்வாதி அல்ல.. நான் ஒரு அரசாங்க அதிகாரியும் அல்ல..பணக்காரனும் அல்ல..ஏழையும் அல்ல..சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன். இன்றைய சமுதாய நிகழ்வுகளே என்னை இந்த சிறு கட்டுரையை எழுத தூண்டி உள்ளது.

இது என்னுடைய மனக்குமுறலே..நான் யாரையும் குறிப்பிட்டு இந்த கட்டுரையை எழுதவில்லை...

நம்மால் நமக்கு தேர்ந்து எடுக்கப்ப்டும் அரசாங்கம் நம்மை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதாகத்தான் 60 ஆண்டுகளாக கூறுகின்றன. ஆனால், நமக்கு முனேற்றம் என்பது என்னவோ எட்டா கனியகவே உள்ளது.

சமுகத்திற்கு கேடு விளை விப்பவற்களை அரசாங்கம் கைது செய்து; மக்கள் அமைதியாய் வாழ வழி செய்வதாக கூறி அரசாங்கம் பலரையும் கைது செய்கிறது. ஆனால் கைதுக்கு பிறகே மக்கள் அமைதி இழக்கின்றனர். பேருந்துகள் ஓட விடுவது இல்லை, கடைகள் திறக்க விடுவது இல்லை, பொது இடங்களுக்கு மக்கள் செல்ல முடிவதும் இல்லை; மீறி சென்றால் ஒழுங்காக வீடும் திரும்ப முடிவதில்லை.
ஆனால் கைதுக்கு முன்னே மக்கள் இயல்பாக வாழ்ந்தார்கள். கைதுக்கு பின் தான் இயல்பு வாழ்க்கை பாதிக்கின்றது. நான் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.

நான் அரசாங்கத்தை கேட்கும் கேள்வி இதுதான். உங்களால் ஒருவரை கைது செய்து சமுதாயத்தை பாதுகாக்க முடியவில்லை என்றால் நீங்கள் என்ன அரசாங்கம் நடத்துக்றீர்கள்?? மேலும் நீங்கள் அவர்களை கைது செய்யாமலே இருக்கலாமே!! இதனால் என்ன பயன்?? மக்களின் வரிப் பணம் தான் வீண்... வீணாக அப்பாவி பொது மக்கள் தான் கலவரத்தில் கல் வீச்சுக்கும் காவல்ர்களின் லத்திக்கும் பழியாகின்றனர், இதற்கு நீங்கள் கூறும் விளக்கம் தான் என்ன??

இது போன்ற நாடகங்கள் எல்லோரது ஆட்சி காலங்களிலும் அரங்கேற்றப் படுகிறது!!

எழுதியவர் : முரளிதரன் செங்கோடன் (10-May-13, 8:48 pm)
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே