காதல் கவிதையை மட்டும் தேடாதே
என்ன அவலநிலை!
எண்ண மனம் அலறும்நிலை!
கண்ணழகு ,காதழகு
அவள் பின்னழகு
என்னைக் கொள்ளும்
பேரழகு!
என எழுத காதல் கவிதை!
அதை தேர்வு செய்யும் போதை நிலை!
எந்தன் இன இழிநிலை
எடுத்து இயம்பும் புதுக்கவிதை
எழுதி வர எழுத்திலே!
எவரும் பாராது இருக்க
மனம் கொதிக்கும் நிலை ..........