சிந்தனை - பகுதி 3
சில கேள்விகளும் பதில்களும்
உணர்ச்சி என்பது
புலன்களால் உள்வாங்கும்
உணர்வுகளால்
ஒரு உயிரால் பெறப்படுவது
அது உயிரியல் எனும்
பரிணாம நிகழ்வால்
இயல்பாகவே
கிடைக்கப் பெறுவது
அதை கட்டுக்குள் வைக்காவிடில்
வளர்ந்து கொண்டே போகும்
தன்மையுடையது
அதை வளர்க்க
தனிமுயற்சி என்பது
தேவையே இல்லை
எனவே அதை
கட்டுப்படுத்த வேண்டியது
அவசியமாகிறது
மேலும்
உணர்வுகளை பதம் பிரிக்க
அறிவு தேவைப்படுகிறது
அறிவு வளர வளரவே
பதம் பிரிப்பதில் துல்லியம்
பெறப்படுகிறது
அறிவு என்பது
பயிற்சியால் மட்டுமே
பக்குவப் படுத்தப்படுகிறது
அந்த பயிற்சியே
வளர்ப்பது என்றாகிறது
வளர்ப்பதால் மட்டுமே
அறிவு மதிப்பு கூடப்பெறுகிறது
உணர்தல்,
உணர்தலில் பதம் பிரித்தல்
பதம் பிரித்தலில்
துல்லியம் கொள்ளுதல்
உணர்ந்ததை வெளிப்படுத்துதல்
வெளிப்படுத்துவதில்
கட்டுப்பாடு கொள்ளுதல்
இவையே அறிவின்
வேறுபட்ட நிலைகள்
பகுத்து அறிவது
இதைவிட சிறந்த
விளக்கம் தேவையா
பகுத்தறிவுக்கு?
இருப்பினும் பார்ப்போம்
இன்னும் விரிவாக
தொடரும்