மாய‌ சமாதிகள்(Virtual Tombs )

உன் சமாதிக்கு முன் நின்று
மலர்கொத்து தினம் ஒன்று
வைப்பதென்றெண்ணியே
உன் ஃபேஸ்புக் சுவர்களில் எழுதுகிறேன்
தினமும் வாசகங்கள்

நீயிருந்த போதுதான்பதில்தரவில்லை
நீயிறந்த போதும்நான் விட்டுவிடவில்லை
என் தரிசனத்தை உன் கல்லறைக்கும்
உன் முகப்புத்தக சுவர்களுக்கும்

எழுதியவர் : Rikas Marzook (15-May-13, 1:46 am)
சேர்த்தது : Rikas Marzook
பார்வை : 129

மேலே