ஆலமரத்தின் தாடிவிழுதில்......

குழந்தைகள் நாம் நம் பிஞ்சுவிரல்களை பிடித்து நம்மை
அழைத்து செல்கிறது ஒரு தாயை போல் வாழ்க்கை...
வழிகளில் பள்ளம்-மேடுகளை
பட்டியலிட்டுக் காட்டுகிறது.
அது அழைத்துச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும்
கடைகள் என தடைகள்....
யாரும் ஆசைப்பட்டு துன்பங்களிடம் செல்வதில்லை,
தன் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிக்கும் பெற்றோரைப் போன்றே அது நம்மிடம் நடந்துகொள்கிறது.
இது "மிட்டாய்"கடை, இது"டீ"கடை என்பதுபோல துன்பங்களிடம் நேரே அழைத்து சென்று காண்பிக்கிறது வாழ்க்கை....
இனம்,மதம்,மொழி,பாலின வேறுபாடு என எதையும்
பிரித்துப் பார்பதில்லை அதனிடம் உள்ளது என்னவென்றால்
இன்பம் தருகையில் உதட்டில் புன்னகை மலரச்செய்யும்
துன்பம் வருகையில் கண்களின் வழியே ஒரு நதியை பெருகசெய்யும்....
அம்மா என்று குறிப்பிட்டிருந்தேன் ஆனால் அது எப்போதும் நம்மை கொஞ்சி கொண்டிருப்பதில்லை,
நம்மை மிரட்டவும் செய்கிறது.
விரல்பிடித்து எழுதக்கற்று கொடுப்பதை போல
நம் கை-கொண்டே எல்லாம் செய்கிறது
நமக்கு தெரிந்தவை மட்டுமல்ல, தெரியாதைவையும் கூட ....
வழிநெடுக காதல் ,குடும்பம்,குழந்தை,சமூகம், பணம்,பதவி,புகழ் போன்ற பல நண்பர்களை அறிமுகம் செய்தாலும் நமக்கு தேவையான, மிகமுக்கியமான, நம்மை நாமே நிர்ணயம் செய்யும் உரிமையையும்,நாளை நிகழப்போவது என்ன
என்ற உண்மையையும் இன்னும் தன்னிடமே இரகசியமாக வைத்துள்ளது.
ஜாதகங்களும்,ஜோதிட கோட்பாடுகளும் அனுமானங்கள் தானே தவிர அதுவே நிச்சயமல்ல.நமக்கும் மேலே ஒரு சக்தி
நம்மை வழிநடத்துகிறது,நம் நாட்டில் நாத்திகம்,ஆத்திகம் பேசி அதை மறுத்து,ஆதரித்து வந்தாலும் மேலைநாடுகளிலும் அத்தகைய புரிதல் இருப்பதை மறுப்பதற்கில்லை...
இன்றல்ல,நேற்றல்ல பூமி தோன்றியபோதே தோன்றிய விக்கிரமாதித்தியன்-வேதாள கதை இது.
வாழ்க்கை என்னும் வேதாளம்;
என்னடா வாழ்க்கையை இவன் அம்மா,ஆசான்,நண்பன் என்று சொன்னான் இப்போது வேதாளம் என சொல்கிறானே என யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம்.இது போன்ற பல பரிணாமங்களை உள்ளடக்கியதே நம் வாழ்க்கை என்பதை சொல்லவே இத்தகைய வார்த்தைகளை பிரயோகித்தேன்.சரி சங்கதிக்கு வருவோம்,
வாழ்க்கை என்னும் வேதாளம் நம் முன்னோர்களிடம் கடினமான கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்திருக்கிறது.அவர்களும் சரியான பதில்களை சொல்லி உலகத்தை காத்து வந்திருக்கிறார்கள்.
இப்போது நமது முறை இந்த முறை இரகசியங்களை அறியும் அந்த இறுதி கேள்வி நம்மிடம் கேட்கப்படும் என தோன்றுகிறது ஏனென்றால் அடிக்கடி நிகழும் சீதோஷன மாற்றங்களும்,
அவ்வப்போது நிகழும் நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளும் அதற்கான சமிங்கைகள் என்றே
நாம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னும் இயற்கை சீற்றங்கள் பல நிகழ்ந்திருக்கிறது ஆனால் தற்போது நிகழ்வதை போல் மோசமான வானிலை மாற்றங்களை உண்டாக்கியதில்லை.
தற்போதைய உலகத்தை பைபிலில் கூறியதைப்போல
ஒரே கப்பலில் அடக்கிவிட முடியும் எனக்கு தோன்றவில்லை.ஏனென்றால் ஏவுகனைகளையும்
அணு ஆயுதங்களையும் உலகம் முழுவதும் நாம் நிரப்பிவைத்திருக்கிறோம்.அவைகளுக்கே ஒரு கப்பல் போதாதல்லவா.
வாழ்க்கை வருடமா,நிமிடமா,
புனிதமா இல்லை வணிகமா
இதை அவரவர் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்.
வாழ்க்கை கட்டுமரமோ,
காட்டுமரமோ ஆனால் நாம்
அந்த ஆலமரத்தின்
தாடிவிழுதில் குழந்தைகள் போல ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் நிதர்சனம்.

எழுதியவர் : மீனாட்சி.பாபு (17-May-13, 5:49 pm)
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே