மேல்வர்க்க ஒடுக்கம்
எதை அடைய இத்தனை இழப்பு, ஈழம் பற்றி மூச்சுற பேசும் மூத்தோரே முற்றி நிற்கும் இந்த இளவல்களின் இதயம் அறிவிரோ??? அலுவலில் அலைகழியும் அலுத்த நெஞ்சங்களின் துயர் துடைபோர் ஒருவருமில்லை. வேலை செய்யுமிடமோ உதவும் கரம் அங்கு வேலை செய்பவரின் நிலையோ ஏந்தும் கரம் பணி தந்தே பணம் பெறுகிறோம் இருந்தும் வளையும் நிலை வந்ததெதற்கு வருமானம் தரும் வர்க்கம் ஆயின் வாயில் வந்ததை கூற இயலுமோ, அரண் போலிருக்கும் அரசாங்கம் அருகே வர மறக்கும் காரணம் என்ன??? கொடுங்கோல் வர்க்கத்தின் கொடைக்கா??? காணல் என ஆகிறது கண்ணீரும். பட்டறிவும் பகட்டு முன் பட்டு போகுமோ??? "சான்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" சொன்னவர் எங்கே சொடுக்கு போட்டு அழைக்கும் என் அதிகாரி முன் தோற்கிறது இந்த சொற்சொடர்...!
இப்படிக்கு அலுவலக நாகரிகம் அரவும் இல்லாத உயர் அதிகாரியும், அடக்கும் ஆளுமை இருப்பதால் அடக்கியே வாழும் பண முதலைகளும் நடத்தும் பணியில் பயனற்று பணி தொடரும் படித்த பாமரச்சி….