நான் நீ நாம்
மாலை நேர பொழுதில்,
நம் முதல் பார்வை
பார்க்க ஆசை,
இரவின் மடியில்,
உன் முகம் பார்த்து
மதியை காண ஆசை,
காலை கதிரவன்,
நம் இருவரை
அணைக்க ஆசை,
பூக்களின் இதழில்,
ஒன்றாய் கூட ஆசை,
கடல் கரை மணலில்,
நம் கால்கள் கோலம்,
போடா ஆசை
காலம் கரைந்து போக
உன் நரையை,
ரசிக்க ஆசை
கல்லறை கதவுகள் வரை
உன் கை விரல்
பிடிக்க ஆசை

