............நம்பியதில்............
நான் கடந்துபோகிற பாதைகளில்,
ஆறுதலாய் உனதன்பு துணைக்குவரும்,
என்றொரு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது !
உன் மனதிற்கு குணம் எதிரியானத்தில்,
இனங்காணாத தாக்குதல் என் காதல்மீது !
தொடர்ந்து வந்தவனை தொலைத்து,
வதம்செய்யப்பார்க்கிற உஷ்னப்பெருமூச்சும்,
பார்வையும் காண்கிறேன் !
நினைகிறேன் நீ தந்த நிறைவான உறவை !
உள்ளே பரவிப்பாய்கிற அந்தப் பெருவெள்ள உணர்வை !
அடிபோடி !!
இன்னும் இருபதுமுறை தூக்கியெறிந்தாலும்,
உன்னையே தொடரும் மதிபடைத்தேன் !
விலகவிலக எத்தனிக்கும் மனது,
எத்தனை முறைதான் தோற்கும்?
விடுவாய் முயற்சியை என்றிருந்தேன் !
அந்தோ !!
வலிவுபெற்றது உன் முடிவு !
தனிந்துபோகிற தாக்கம் துணிந்து ஆள்கிறது உன்னை !
இங்கேதான் !
என் எல்லா செயல்களும் எதிரியென்றாகிறது உனக்கு !
இவ்விடம் !
எதற்கும் துணிகிற துணிச்சல் எனக்குத்தானில்லை !
நான் அலைகிறேன் நாதியற்று நாம் உலவிய இடங்களில் !!