தேசம் எங்கும் தேடுகிறேன்

தேடுகிறேன் தேடுகிறேன்
தேசம் எங்கும் தேடுகிறேன்
பாசம் என்னும்
வேஷம் போடா மனிதனை
தேடுகிறேன் .
தூக்கம் கொள்ளா
விழிகளை தேடுகிறேன்
துக்கம் கொள்ளா
இதயத்தை தேடுகிறேன்
லஞ்சம் நடமாடா
இடத்தை தேடுகிறேன்
பஞ்சம் இல்லா
பாரினை தேடுகிறேன்
காம கலப்படம் இல்லா
காதலை தேடுகிறேன்
காசு பணத்திற்காக
சொந்தம் கொண்டாடாத
பந்த பாசங்களை தேடுகிறேன்
ஊழல் இல்லா
அரசியலை தேடுகிறேன்
வாடா மலர்களை
தேடுகிறேன் .
விடியா இரவொன்றை
தேடுகிறேன் .
நன்றி மறவா
மனிதனை தேடுகிறேன் .

************* நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 9:56 am)
பார்வை : 106

மேலே