தண்ணீர் போல் கண்ணீர்

உன்னால் ..
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றப்படுகிறேன் ..
மறக்கப்படுகிறேன்
மறைக்கப்படுகிறேன்


நீ வல்லினமான
சொல்
மெல்லினமான
செயல்
இடையினமான
வலி

கொழுந்து விட்டு எரியும்
காதலுக்கு
தண்ணீர் போல் கண்ணீர்

கஸல் ;54

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (24-May-13, 2:59 pm)
பார்வை : 151

மேலே