முதன் முதலாய்

முதன் முதலாய் என் பக்கத்தில் அவள்
முத்தங்கள் நூறு கொடுத்தது போல முழுவதுமாய் நனைந்த அவளின் உதடுகள்
இரட்டை கைகளின் நடுவே சிறிதே தடுமாற்றத்துடன் நடனமாடியது தேநீர்குவளை
வெட்கத்தின் விளிம்பில் சிக்கிய அவள் காலின் கட்டைவிரல் சிறிதே வீணைமீட்டியது மணலில்
வளைந்த இரு புருவங்களுக்கு இடையில் பிறைபோல் நெற்றிக்கு அழகு சேர்த்தது ஒற்றை நிற பொட்டு
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் இருந்த இரு உதடுகளும் எதையோ பேசவேண்டும் என்று எண்ணுகிறது
ஆனால்
இடைமறித்த மௌனம் நினைவுகளுடன் மட்டுமே நடைபோட அனுமதித்தன,
சிறிதுநேரத்தில் சித்திரையில் தோன்றிய பௌர்ணமி போல் ஜொலித்த அவள் சட்டென்று என் தோலில் சாய பட்டென்று என் உள்ளம் பரவசத்தின் உச்சியை தொட்டது
கள்வன் இல்லாத நிலையில் திருடப்பட்டுகிடந்தன இரு இதயங்கள்,
ஆண்டுகள் நூறு வாழ்ந்தது போலவே ஏதோ ஒன்றை அடைந்தது போலவே இனிதே நிறைவு பெற்றது முதல் சந்திப்பு,
அந்தி சாயும் நேரத்தில் அரங்கேற்றப்பட்ட அவள் காதல் இன்றும் முளைக்கிறது என் இதயத்தில் அன்று போலவே முதன் முறையாய் ........