பெண் சிசு
நீ மட்டும் பிறந்திருந்தால்
இந்தியாவை இந்த ஆண்டே
வல்லரசாக மாற்றி இருப்பாயோ !
வேறு கிரகத்தில் உயிர் வாழும்
ஆராய்ச்சி செய்துருப்பாயோ!
உயிர் கொல்லி நோயை கொன்று இருப்பாயோ !
அன்னை தெரசாவாக மாறியிருப்பாயோ!
அல்லது மென் பொருளை
கண்டுபிடித்து இருப்பாயோ !
வறுமையை அழித்து இருப்பாயோ !
அல்லது முதல் மந்திரி ஆகி இருப்பாயோ !
கள்ளிச்செடிக்கு தெரிந்து இருந்தால்
அது விஷத்தை கூட சுரந்திருக்காதே ?
விதி மட்டும் இல்லையெனில்
வியக்கும் தாயே
உன்னை பார்த்து இவ்வுலகம் !

