தாய்
தண்ணீரிலும், சிறுநீரிலும்
தன்நிலை அறியாமல்
புரண்டிருக்கிறேன்!
மலத்தை குழைத்து குழைத்து
மார்பிலே பூசியும்
விளையடிருக்கிறேன்!
எறும்பு கடித்தாலும்
எது கடித்தது
என்று சொல்லத்தெரியாமல்
அழுதிருக்கிறேன்!
என்நிலை அறியா
அந்த குழந்தை பருவத்தில்
இதுயெல்லாம்
நான்
செய்திருக்கிறேன்!
மனநிலை அறியா
அந்த பருவத்தில்
தன் உயிராக நினைத்து
என் உயிரை வளர்த்தது
ஒரு ஜீவன்!
அண்டத்தில் அதிசயம்
ஆயிரம் உண்டு! - என்னை
அரவணைத்த இந்த
பிண்டத்தின்(தாய்) அதிசயம்
எதறுக்கும்
இணையில்லா ஒன்று!