சுடுகாடு

வாழ்க்கையென்னும் பயணம்
இருளில் தொடங்கி இருளில் முடியுது.
இதன் இடையில் தோன்றும்
ஒளியை என்றும் - இறைவன் தந்தது.
இந்த பணிவை கற்று
வாழ்ந்திட தானே வேதம் சொல்லுது.
உன் அறிவு என்னும்
புத்தியினாலே உலகம் இருளில் தவிக்குது.
உன்னை போல
உலகில் இருப்பவர் மனிதரல்லவா?
நீ - உன்னை போல
அவரையும் நினைத்தால் இனிமையல்லவா?
அன்பு என்னும் -சுவாசம் ஏந்தி
வாழும் வாழ்க்கையில்
ஆசை என்னும் துன்ப கடலில்
தவிப்பதேனடா?
அன்பை நம்பி நீயும் இங்கு
வாழும் வாழ்க்கையில்
ஆசை என்னும் துளி தான்
நம்மை நனைப்பதில்லடா.
அன்பு கொள்ளடா, மனிதனை
மதித்து வாழடா.!
குழந்தையாக பிறந்தே - வளர்ந்து
மனிதானகிறோம்.
இன்றும் மனிதனாக வாழத்தானே
மறந்து போகிறோம்.
கோபம் இன்னும் உணர்வை
கொண்டு கொழையாகிறோம்.
அஹிம்சை விதைத்த நாட்டில்
இன்று - வன்முறைகள் ஏந்தினோம்?
உலகை - சுடுகாடக்கினோம்?