ஆசை

உன் நெஞ்சோடு என்
செவி சாய்த்து உன்
இதயம் துடிக்கும்
ஓசை கேட்க ஆசை........

உன் கூந்தல் வாசத்தில்
கோடி வருடம் மயங்கி
கிடக்க ஆசை....

உன் கால் கொலுசின்
சத்தம் கேட்டு
காலையில் கண்விழிக்க
ஆசை.....

காலையில் கதிரோன்
கதிர் பிறக்கும் நேரம்
உன் கையால் காபி
குடிக்க ஆசை...

உன் புடவை முந்தானையில்
தலை துடைக்க ஆசை...

உன்னோடு சேர்ந்து
சமையல் கற்று கொள்ள
ஆசை...

அவசரமாக உன்னை
அழைத்துக் கொண்டு
அலுவலகம் செல்ல ஆசை...

அனுதினமும் உன் மடியில்
தலை வைத்து தூங்க ஆசை..

ஆயுள் முழுவதும்
உன்னோடு அழகான
ஒரு வாழ்க்கை வாழ ஆசை..

எழுதியவர் : முகவை கார்த்திக் (5-Jun-13, 4:05 pm)
Tanglish : aasai
பார்வை : 92

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே