உன்னால் நான்

அன்பே!

நீ நிலவு..ஆனால்
தேய்வது என்னவோ நான்..
நீ மலர்..ஆனால்
வாடுவது என்னவோ நான்..
நீ மான்....ஆனால்
வலையில் விழுந்தது நான்.
நீ வானவில்..ஆனால்
நான் வண்ணம் தொலைந்து போனேன்..
நீ கொடி..
மனமுடைந்து போனேன் நான்...
நீ தென்றல்..ஆனால்
திசையற்று போனேன் நான்.
நீ கிளி... ஆனால்
ஒடிந்து போனது என் சிறகு..
நீ உயிர்...அதனால்
நடை பிணமானேன் நான்

எழுதியவர் : முகவை கார்த்திக் (5-Jun-13, 4:07 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : unnaal naan
பார்வை : 113

மேலே