புரிந்து கொண்ட இதயத்தில் காதல் அழகு...!

கவிதை புத்தகம் கேட்டேன்
கண்களை திறந்தாள்

காதல் புத்தகம் கேட்டேன்
கைகளில் வந்தாள்

புத்தகம் எப்படி என்றாள்
பித்தனாய் போனேன் என்றேன்

சத்தமாய் வெட்கம் என்றே
சுத்தமாய் நாணம் கொன்றாள்......

நித்தமும் நினைவுகள் மகிழ
நீளமாய் இரவுகள் மாறும்

படித்திட படித்திடவே மறு
பக்கங்கள் மறுபடி மறுபடி மறுபடி மறுபடி......

உண்மைக் காதல் கொண்டால்
உள்ளம் சலிப்பதில்லை

உடல் அழகில் ஆசைகள் சில நொடியில்
உடைய இருக்கும் வானவில்.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Jun-13, 4:34 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 166

மேலே