புது நட்பு .........

இருமுனையில் ஒரு சந்திப்பு
அறிமுகத்தில் எழுத்தாடல்
இடைஇடையில் கருத்தாடல்
இலைமறை காயாய் சொல்லாடல்
கணிக்க முடியாத ஒரு தேடல்
நட்பின் முனையில் ஒரு குரல்
பிரட்டி திரட்டி துரத்தும் மறு குரல்
பகையை விளக்க ஒரு வேண்டல்
பிரித்து பார்க்காமல் ஒரு சாடல்
பிடக்கா பயணத்தை விரட்டி திணிக்கும் மனம்
ஏர்க்கா பயணத்தை விளக்கி ஒடுக்கும் கோபம்
சிறு தவறை ஏற்று கொண்டாலும் அது நட்பு
பெரும் தவறை ஏற்று கொண்டாலும் அது தப்பு
கரைந்து கொண்டிருந்த நேரம் கல்லானது
நட்பு புகட்ட வெல்ல மெல்ல செல்லலானது
வேறுபாடுகள் விலகியது வெகுளி
தனங்கள் உட்கொனர்ந்தது
புதியதோர் புன்னகை வந்தது
பின்னங்கை பன்னீரை பரவியது
புது நட்பு பூக்களாய் புது மனம் வீசியது...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (9-Jun-13, 9:59 am)
சேர்த்தது : r.mohanasundari
பார்வை : 525

மேலே