போதைச் சேற்றில் மனித நாற்றுகள்

இரவு முழுவதும் களைத்து துறங்கும்
சந்தோஷமான நாள் ஒன்றின் விடியலில்
வெள்ளை சட்டையும் அதன் ஓரம்
மங்களகரமான மஞ்சளும் இன்னும்
சந்தோசம் வேண்டுமென்று கிளம்பியது
சுய நினைவின்றி அரசாங்கத்திற்கு வரி கட்டும்
ஆசையில் நண்பர்களுடன்
வட்ட மேஜை மாநாட்டில்,
அங்கு ,எங்கும் இசைக்கபடுகிறது.
காதல் கீதங்களும் சோககீதங்களும்
போதையாற்றின் நிழலில் கரை ஒதுங்கி
மீண்டும் திரும்பி விடுகின்றன
நாற்றமெடுத்த சாக்கடைகளுடன்
குறைவின்றி குடித்தலில் குளிக்கிறது இறப்பு
தன் ஆனந்தத்தை

எழுதியவர் : த.நந்தகோபால் (9-Jun-13, 10:00 am)
பார்வை : 76

மேலே