தேர்ச்சி பரிசு

அவள் பரிட்சையில் முதல்
தரத்தில் தேர்வான சங்கதியை
என் வீட்டார்க்கு தெரிவித்து
இனிப்பு வழங்க வந்தாள்.அங்கு,நான்,அம்மா,
அப்பா,அக்கா,மாமா,குழந்தைகள்னு
எல்லோரிடமும்
இனிப்பு வழங்கிய அவளைக் கண்டு
அதிர்ந்தேன்,எனக்கு
வழங்காததற்கு ..
பின் தந்தாள் ,
என் முகம் பார்த்து ஒரு புன்னகை...

அதில் உணர்ந்தேன் இனிப்பை...!

எழுதியவர் : உன்னவன் (11-Jun-13, 1:21 pm)
சேர்த்தது : Guna
Tanglish : therchi parisu
பார்வை : 73

மேலே