தமிழருவி மணியன் ஆசை நிறைவேறுமா...? வைக்கோ தமிழக முதல்வர்..!
நாடு வளம் பெற வேண்டும். நல்ல அரசியல் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற சிந்தனை மிக்கவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே...
நமது தேச தலைவர்கள் அனைவருமே, நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்தவர்களே. இன்றைய காலகட்டத்தில், நன்றாக படித்தவர்கள் பலரும் அரசியல் ஒரு சாக்கடை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கின்றனர். இன்னும் சிலரோ, முதல்வராக வேண்டும் என்ற ஒரே கனவுடன் கட்சிகளை துவங்குகின்றனர்.
ஆட்சியில் அமர்பவர்கள் தங்கள் தலை எழுத்தை நிர்ணயப்பவர்கள் பொதுமக்கள் தான் என்று உணர வேண்டும். பாரதியார் சொன்னது போல், ஒவ்வொருவரும் ரவுத்திரம் பழக வேண்டும். சுய நலத்துக்காக போராடும் போது மனதில் சினம் தோன்றும். இதனால், தீமையே விளையும். தவறு செய்யும் அரசியல்வாதிகளை, சகிப்புத்தன்மையுடன் விட்டுவிடாமல், எதிர்த்து போராடும் குணத்தால், நன்மைகளே விளையும்.
கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, ஜெ.வை முதல்வராக ஆக்கியுள்ளோம். கல்வி, மருத்துவம் என மக்களுக்கு பயன்படும் வகையிலான திட்டங்களை, தீட்டுவதற்கு பதில், கேடு விளைவிக்கும் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது தமிழக அரசு. வரும் தேர்தலில், தமிழகத்தில் வைக்கோ தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும். வைக்கோ முதல்வராக அரியணையில் அமர்வார்.
ஒருவேளை, ஆட்சி பொறுப்பேற்றதும், அவரும் தவறு செய்தால், இன்று ஆதரவாக பேசும் நானே, வைக்கோவுக்கு எதிராக திரும்பவும் தயங்க மாட்டேன் என்று தெரிவித்தார் தமிழருவி மணியன் அவர்கள்.
தமிழருவி மணியன், சீமான், கொளத்தூர் மணி, உதயகுமார், பழ.நெடுமாறன், குணா, பெ.மணியரசன், கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் தமிழ் சமூகத்தில் செல்வாக்கு பெறத் துவங்கி விட்டார்கள்..வருங்காலத்தில் பிழைப்புவாத சாக்கடை அரசியல் நடத்தும் கட்சிகள் பயப்படும் நிலை தோன்றிவிடும் என்று கருதலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு