குறை இருக்கு நம்மிடம்

ஆயிரம் குறைகள் இருக்கு நம்மிடம்
இதை ஆராய நேரமில்லை கும்மாளாம்

ஊர் குறையை கேட்க மனம் தாராளம்
எண்ணமிருக்கு நம்மிடம் இன்னும ஏராளம்

ஏற்ற , தாழ்வு எல்லாம் இறைவன் தந்தான்
மாற்றம் தருவதம் அவன் ஒருவன்தான்

பணம் கொண்டவனுக்கு நல்ல மனமில்லை
மனம் கொண்டவனிடம் இந்த பணமில்லை

நம்மிடம் குறை இருக்கு ஓர் ஆயிரம்
அடுத்தவன் குறை காண நம் மனம் தீவிரம்

மட்டமான இந்த செயல் மனிதனுக்கு உண்டு
மாறாது மனதில் இறக்கும் வரை நின்று

நம் குறையை மாற்ற முயற்சியுங்கள்
பிறர் குறை காண்பதை மறந்த்திடுங்கள் !

-ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (15-Jun-13, 9:10 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 94

மேலே