இந்தியத் தொன்மையின் அதிசயம் 7

ஒளியின் முக்கியத்துவம் என்றேனே… என்ன அது….?

நான் சொல்வது எல்லாம் இந்த வான சாஸ்திரம் எனும் துறைக்குள்தான். வேறு எங்குமே உலாவ செல்லவேண்டாம். மேலைநாட்டவன் இப்போது முழங்கும் இந்த ஒளி வருடம் என்பது இரண்டாம் அடியாகும். அதாவது, முதலாம் அடி என்பது இந்த கார்பன் கணக்கு… பூமியின் வயதை அளக்க. இரண்டாம் அடி என்பது இந்த ஒளிவருடம்… கோள்களின் தூரத்தை அளக்க…..
அவனின் அந்த மூன்றாம் அடி என்ன என்று நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். நாமோ நமது இலக்கியத்தில் “என் மூன்றாவது அடிக்கு இடம் எங்கே” என்று ஏற்கனவே கேட்டு வைத்திருக்கிறோம்.

சரி சரி இந்த மேலை நாட்டவனின் இரண்டாம் அடியான ஒளிக்கு நாம் எங்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறோம் என்று பார்ப்போம் வாருங்கள்.

ஒளி என்பது சூரியனிடம் இருந்து பெரும்பகுதியாகவும் சந்திரனின் இருந்து பரதிபலிப்பாகவும் பெறப்படுகிறது என்பதை அடிப்படையாக கொண்டே நமது கணிப்புகள் எல்லாம்.

மற்ற கோள்களுக்கு ஒளிகள் இருப்பதை பற்றி விவாதமோ கோட்பாடுகளோ எங்குமே குறிப்பிடப்பட்டதாக பார்வையில் இல்லை என்பதாகவே தெரிகிறது. கோள்களுக்கு கதிர் வீச்சுகள் உள்ளன என்று நிச்சயமாக கருதப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால் ஒளி எங்கும் தட்டுப்படவில்லை.
ஆனால் சூரிய ஒளியை கருத்தில் கொண்டு அவற்றின் பயனாக வரும் ஒளிக்கற்றையில் இருந்து பிரியும் வர்ணங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கோளும் ஒரு நிறம் பெறுவதாகவும் அந்த நிறத்தை ஆள்வதாகவும் கணக்கிடப்பட்டு உள்ளது. ஆம். பாருங்களேன் அந்த அதிசயத்தை.

கிரகங்களும் அதன் ஆட்சி நிறங்களும்
சூர்யன் – இளம் சிவப்பு : சந்திரன் – பளிச் வெண்மை :
சனி – கருநீலம் : செவ்வாய் – அழுத்தச் சிவப்பு : புதன் - பச்சை : குரு – மஞ்சள் சுக்கிரன் : பழுப்பு வெள்ளை (வெள்ளியின் நிறம்) ராகு – கருப்பு : கேது - சாம்பல் நிறம்.

மனித வாழ்வில் எல்லா கோள்களுக்கும் அவற்றிற்குரிய மதிப்பையும் தகுதியையும் பகுத்து அளித்துள்ளார்கள் தொன்மை காலத்தில். அதே போல அவற்றிற்கு நிறத்தையும் குறிப்பிட்டு கணக்கிட்டுள்ளார்கள்..

எல்லா கிரகங்களுக்கும் அவற்றிற்குரிய பண்புகள் இருக்க, நம் பாமரர்கள் கோயிலுக்கு சென்று நவக்கிரகங்களை வழிபடுவதாக சொல்லி, சனியையும் மட்டுமே வீட்டுக்கு மூத்த பிள்ளையாக பாவித்து அதிகக் கவனம் தருவது கண்கூடு. ஏனெனில் பாமர மனம் பயத்தால் இயக்கப்படுவது. அதனால் தான் சனி கடுமையானவன் என்றதும் வாரத்தின் எந்த கிழமையாக இருந்தாலும் சரி, அது நவக்கிரக கோயிலாக இருந்தாலும் வழிபடுவது என்னவோ குறிப்பாக அந்த சனியை மட்டுமே சிறப்பாக. மேலும் இந்த கருப்பு இவர்களை இருட்டாகி பயமுறுத்துவதால் அதையே சனிக்கும் இவர்களாகவே வழங்கி, சனிக்கிழமைகளில் கருப்புத்துணியில் திரியிட்டு விளக்கு ஏற்ற தொடங்கி தொன்மையே பரிகாச நிலைக்கு ஆளாக்கி விட்டு, நமது பெருமையை கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள். கருப்பு ராகுவுக்கான நிறம். கருநீலம்தான் சனிக்கான நிறம்.

இந்த நிறத்தால் என்ன பயன்…. பின்னே பார்ப்போம். இடையில் சில மங்காத்தாவின் வியப்பு, மலைப்பு செருகல்களும் இருக்கிறதே…

நிறத்தை மேல்நாட்டவன் கண்டுபிடித்ததாகவும், காப்புரிமை அவனுக்கே சொந்தம் எனவும் பெருமை பறைசாற்றும் மேதகு மேல்நாட்டு மேதாவிகள் நமது இந்த நிறப்பிரிவு பகுப்புக்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. இந்த நிறப்பிரிவு பகுப்பு எல்லாம் பூதக்க்ண்ணாடி வந்து, சூரியனின் நிறத்தை இவர்கள் பிரித்து, ஏழு நிறங்களை கண்டுபிடித்து, அறிவியல் என்றும் விஞ்ஞானம் என்று வியாக்கியானம் பேசும் காலத்தில் செய்யவில்லை நம்மவர்கள். எனவே தான் என் மலைப்பு.


சூரியனுக்கு இளம்சிவப்பு நிறத்தையும் செவ்வாய்க்கு சிவப்பு நிறத்தையும் கொடுத்துள்ளார்கள். அதில் செவ்வாயின் சிவப்பை கண்டு “ஆம்.. சிவப்புதான்” என்று இரு வார்த்தைகள் சொல்வதற்காக இந்த மேல்நாட்டவன் செய்த செலவுகளை கணக்கு போடலாமா?.. சில பல கோடிகள் வரும்.

இன்னும் இந்த சூரியனின் நிறம் இளம் சிவப்பு என்று இவன் தலையாட்டுவதற்கு இன்னும் பலபல கோடிகள்தானே செலவு செய்யவேண்டியிருக்கும். அது சாதனைதானே. இங்கு அமர்ந்து சொன்னதெல்லாம் அபத்தம்தானே. பிதற்றல்தானே. ஆதாரம் இல்லாத சங்கதிகள்தானே. மூடநம்பிக்கைகள் பொதிந்த மூட்டைகள்தானே. இல்லை… இல்லை திண்ணைக் கதைகள்தானே…. இதில் என்ன இருக்கிறது எவரும் சொல்ல்லாமே கடலின் நிறம் நீலம் என்று….. சரிதான்…. சூரியனில் விப்கியார் எனப்படும் ஏழு நிறங்களை பகுத்து எடுக்கும் வரை சூரிய ஒளியில் வெள்ளை நிறம் மட்டுமே இருக்கிறது என்று நம்பி வந்தது மனித குலம்.
இப்போதும் சூரியனை கண்ணால் காணும்போது அதன் நிறம் வெள்ளை என்றே கூவுகிறது மனித மனம். ஆனால் அது இளம் சிவப்பு என்கிறது நமது தொன்மையின் அதிசயம். ஏன் இந்த முரண்பாடு.
தொடக்க காலத்தில் சொல்லும்போது இது அபத்தம், முரணானது. ஏனெனில் சூர்யன் தெரிவது வெள்ளையாக.

இப்போது இது ஆதாரமற்றது ஏனெனில் நிரூபிக்கப்படாதது இந்த வானவில் சங்கதியும் விப்கியார் எனும் ஆங்கில சுருக்கெழுத்துக் கோர்வையும் வராத வரை.

அதேபோல சனிக்கு அதற்குரிய குணத்தையும் மந்த இயக்கதையும் கொடுத்துள்ளார்கள். இப்போதோ விஞ்ஞானிகள் சனியை சுற்றி புகை மண்டலம் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.


எப்போதுதான் நமது தொன்மையின் அதிசயத்தை வியந்து ஒப்புக் கொள்ளப் போகிறோம்? அதில் பொதிந்து இருக்கும் புதையல்களை எடுத்து நுகரப்போகிறோம் நாம்? வெளிநாட்டவன் வந்து இது புதையல், விலை மதிக்கப்பட முடியாதது என்று சான்று அளிக்கவேண்டுமே… அதுவரை முடியாதுதானே. மேல்நாட்டவன் புகழ் மட்டும்தானே பாடிக்கொண்டிருப்போம் நாம்.

அதுசரி இந்த நிறங்களுக்கும் மனித வளத்திற்கு என்ன தொடர்பு?

மனித ரத்தம் சிவப்பு. ஏன் எல்லா உயிரின் ரத்தத்தின் நிறமும் ஏறத்தாழ சிவப்புதான் (விதி விலக்காக சில உயிரினிங்கள் தவிர) ஏன் மற்ற நிறத்தை இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை ரத்தத்திற்கு? எனது ஆச்சரியத்தின் உச்சமே இதுதான்.

உலக உயிர்க்கெல்லாம் வாழ்வு குடுப்பது சூர்யன் என்று சொல்லிவைத்து சென்று இருக்கிறார்கள் நம்மவர்கள். அதாவது சூர்யன் இல்லாத, சூரிய ஒளி இல்லாத இடத்தில் உயிர்கள் இருப்பது விதி விலக்கு, சற்றேறக்குறைய அசாத்தியம் என்று எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

அதற்கும் இந்த சிவப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? இந்த சூரியனுக்கும் ரத்த்த்திற்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ? ரத்ததிற்கும் இந்த உயிர்மூச்சிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?

ஏனெனில் இந்த செயற்கை ரத்தம் என்பது முயற்சியில் இருந்து வருகிறது. அது நடமுறைக்கு வந்த பிறகுதானே இந்த ரத்தம், அதன் நிறமான சிவப்பு மற்றும் சூரியனுக்கு அதனுடன் இருக்கும் தொடர்பு எல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் ஆதாரத்துடன், மேலை நாட்டவனின் சான்றுடன் நிரூபிக்கப்பட முடியும்.

என் போன்ற கைநாட்டுக்கு நமது தொன்மையை பார்த்து வியக்கத்தானே முடியும்.

நிறத்திற்கு இருக்கும் மகத்துவம் இதுதான். மனோத்ததுவ மருத்துவத்தில் நீலம் என்பது மனதுக்கு இதம் அளிக்கும் நிறம் என்றும், மஞ்சள் சாதக நிலை சிந்தனைகளை அதிகரிக்கும் தன்மையுடையது என்றும், வெண்மை அமைதி தரும் மன நிலையை அளிக்கும் என்றும், சில குறிப்புகளில் ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார்கள். இப்போது புரிந்திருக்குமே நிறத்திற்கு மனித வளத்திற்கும் என்ன தொடர்பு என்று.

சிந்தனைகளை கட்டுப்படுத்துகிறதாம் நிறங்கள்.

சிந்தனை மட்டுமே உலகில் சிறந்தது என்றும், அதை வளப்படுத்துவதே அதி முக்கியம் என்றும் மனோத்த்துவ மருத்துவம் கூறுகிறது. அதையேதான் இந்த விஞ்ஞானமும் கூறுகிறது. அதையே நம் முன்னோர்கள் கூறிக்கொண்டிருக்கும்போது அது திண்ணைக் கதையாகிப் போனது.

இந்த நிறங்கள் ஒளியில் இருந்து பிறந்த பகுப்புகள். கண்ணுக்கு நேரடியாக புலப்படாத சங்கதி இந்த ஒளிக்கற்றையில் இருக்கும் நிறங்கள். நேருக்கு நேர் இருக்கும் பொருள்களின் நிறங்கள் எல்லாமே கண்கூடுதான்.

கோள்களுக்கு அளித்த நிறங்கள் எப்படி கண்கூடானதோ தெரியவில்லை.

இந்த கிரகங்களை வைத்து நமது தொன்மையின் அதிசயம் செய்த சங்கதியை என்னவென்று சொல்வது.

இவை எல்லாம் கட்டுக்கதைகள் என்றால் இன்று அவைகளை புதியதாக அவிழ்த்து விடலாமே. அதே கட்டுக்கதைகள் இன்று வரை மாறாமல், துல்லியம் பிசகாமல் தொடர்வதும், பின்பற்றப்படுவதும் மலைக்கத்தானே வைக்கிறது.

எழுதியவர் : மங்காத்தா (17-Jun-13, 8:08 pm)
பார்வை : 212

மேலே