படைப்பாளிகளுக்கு சமர்ப்பணம். தாய்மை

எப்படி படைப்பது ஒரு கலையம்சமோ அதே போல கருத்து சொல்வதும் ஒரு கலையம்சமே. படைப்பாளிக்கு ஊக்கம் தருவது கருத்தாளியின் கருத்து நுட்பமே. இதை கோட்பாடாக தெரிந்து வைத்திருந்தாலும், சற்று தினங்களுக்கு முன்பு வரை இதை அனுபவித்து எழுதும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை.

இன்று இதை எழுதும்போது அந்த உணர்வுடன் இதை எழுதுகிறேன். ஏன் எனில் நான் எழுதிய தொடர் “இந்திய தொன்மையின் அதிசயம்” மூலம் எனக்குள்ளும் படைக்க வேண்டும் என்ற எண்ணம் வரத்தொடங்கியது. அதே சமயம் எனக்கு எழுத்து திறம் இல்லை என்பதும், சரியான திசையில் என்னால் எழுத்தில் பயணிக்க முடியாது, அது கடினமே என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்

ஒரு பெண் முதன் முறையாக கருவுற்றிருக்கும் போது வரும் அந்த குழந்தை பற்றிய கனவுகளும் மனதில் ஓடும் மென்மையான உணர்வுகளும் அனுபவிக்க கிடைத்தது போன்ற ஓர் உணர்வு பெறுகிறேன் இப்போது.

ஏனெனில் கருவுற்றதும் வரும் நிலையும் முதல் முதலாக காதல் வந்த நிலையும், மெல்லிய உணர்வுகளால் இழைக்கப்ப்ட்ட கனவு ஆடை கொண்ட நிலையே. அந்த தொடர் எழுதி முடித்தபின் அடுத்து எழுத இருக்கும் தலைப்பு நினைத்து மனம் புரள்கையில்தான் புரிந்தது எனக்கு கருத்து சொன்ன சிலரின் வரிகள் என்னை ஊக்கப்படுத்தியது என்று.
அதாவது தாய்மை அடைந்தவுடன் செவியில் கேட்கும் காதல் கணவன் சொல்லும் மிக மெல்லிய முதல் அன்பு வார்த்தையும் கனவுகளை விரிக்கும் ஊக்க சொற்களும் அவை எனக்கு.

அடுத்து எனது “சாசனம் என்ன சொல்கிறது” எழுதத் தொடங்கி பல பக்கங்கள் தாண்டிய பின்புதான் புரிந்தது நான் எழுத நினைத்தது ஒன்று, எழுதிக் கொண்டிருக்கும் திசை வேறொன்று என்று.

அப்பொழுது புரிந்தது ஒரு குழந்தையை நல்லபடியாக பெற்றெடுத்து கையில் கொள்வது எத்தனை கடினம் என்று. ஏனெனில், அந்த தொடரை எழுத நினைத்தது ஓர் அலசல் கட்டுரையாக. ஆனால் எழுதிகொண்டு போனது ஓர் வரலாற்று நிகழ்வாக. பல அடிகள் பயணித்து, சற்றே ஓய்வெடுத்து திரும்பிப் பார்க்கையில்தான் புரிந்தது கருவுற்றதை பெற்றெடுப்பது மிகக் கடினமான செயல் என்று.

அதன் விளைவாக உதித்ததுதான் இந்த “தாய்மை” எண்ணம்.

இந்த தளத்தின் படைப்பாளிகள் அனைவரும் தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என்றும், பல இடையூறுகளுக்கு இடையே நல்ல பல படைப்புகளை தந்து கொண்டிருகிறார்கள் என்றும் அதை படைப்பில் பதிவேற்றும் வரை ஏற்படும் தவிப்புகளில் இருந்து மீண்டு வந்து திருப்தி கொள்ள, கருத்தாளிகளின் எண்ணப் ப்ரதிபலிப்புகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் தெளிவாக உணர்கிறேன்.

எனவே அனைத்து படைப்பாளிகளுக்கும் அவர்களை ஊக்கப்படுத்தும் அனைத்து கருத்தாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்களும் நன்றிகளும்.

எழுதியவர் : மங்காத்தா (18-Jun-13, 10:06 am)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே