லிமரிக்

வாசலில் வாழைத்தார் ,பந்தக்கால் நாட்டி
அழகான மணடபத்தில் மணமேடை மாட்டி
மணமக்கள் மாலை யிட்டதும்
மணமகன் அருந்ததியைப் பார்த்ததும்
மணமகள் கால் விரலில் மாட்டினான் மெட்டி !

வலையோடு படகுத் துறை அக்கரையில்
பாய்மரம் நின்று கண்ட வண்ணம் கலங்கரையில்
வீசினான் கடலில் வலையை
மாட்டினான் தோளில் மீன்வலையை
காலன் வருமுன்னே விளக்கமாகச் சேர்ந்தான் இக்கரையில் !

(லிமரிக் வடிவம் )

எழுதியவர் : தயா (20-Jun-13, 5:03 pm)
பார்வை : 185

மேலே