பிணம் காக்கும் பாதங்கள்
விழப் போகும்
இலையிலும் சறுக்கி
விளையாடுகிறது
எறும்பு...
எறும்பு
தூக்கிசெல்லும்
உணவை
பகிந்துண்ண
காத்துக் கிடக்கிறார்
கடவுள்.....
கடவுளின்
கண்ணீரில் விளைந்து
கிடக்கிறது
கல்லறை தோட்டங்கள்...
கல்லறையின்
காவலுக்கும்
நாளைய பிணம்
நடமாடுகிறது...
பிணம் தூக்கும்
நால்வரின் பாதங்களில்
வாழ்ந்து கிடக்கிறது
எறும்பு.....
எறும்பை காக்க
நீரில் மிதக்கும்
இலையில்
இணுங்கிய காயம்...
எப்போதும் தயாராய்
விழவே காத்துக் கிடக்கிறது
எங்கேனும்
ஒரு இலை...

