கைகொடுப்போம் கரைசேர
இயற்கையின் இனம்தெரியா கோபம்
இன்று கோரதாண்டவம் ஆடிட
மிகப்பெரிய குன்றுகளும்
கரைந்துபோனது மழை வெள்ளத்தில் .............
ஆன்மீக பயணமது அபாய பாணமாகி
சுற்றுலா சென்றவர்களை
சூறாவளி மழை தாக்கி
உணவிற்கும் உடைக்கும் காத்துகிடக்க ............
ஒதுங்கவும் இடமில்லாமல்
ஓய்வுக்கும் இடமில்லாமல்
மழையில் நனைந்த உடலும்
பயத்தில் உறைந்த மனமும் ..........
கண்ணெதிரே மாண்டுபோன
உறவுகளும் சகபயணிகளும்
பதட்டத்துடனே கடந்துபோன
ஒவ்வொரு நிமிடங்களும் ..........
தங்கியிருந்த கூடாரங்கள் எல்லாம்
தண்ணீரோடு அடித்துபோக
உயிருக்கு பயந்தவர்கள் எல்லாம்
ஓரணியாய் அடைக்கலம் தேடி .........
உறவைதொளைத்தவர்களும்
உடமைகளை இழந்தவர்களும்
மழைமுடிந்து வெய்யில்துறந்தும்
கண்ணில் வடியும் மழையோடு இன்றுவரை .......
காப்பாற்ற துணைவேண்டி
காத்துகிடக்கும் கூட்டமது
நம்முதவி வேண்டுபவருக்கு
மனமுவந்து உதவிடுவோம் ............
சுற்றுலாதளமது சோகதளமாய்
முற்றிலும் அழிந்துபோக
மீண்டுவர நாளாகும்
வளம்திரும்ப வருடங்களாகும் .........
நம் உறவு கூட்டமஅங்கே
வாடிட விடலாமா
இருப்பவர் எல்லாம் அல்லிகொடுங்கள்
இல்லாதவர்கள் கிள்ளிகொடுங்கள் ..........
தனித்துவிட்ட அவர்களுக்கு
துணையாக நாமிருப்போம்
இயற்கையின் வழிவந்த
விழிநீரை துடைத்திடுவோம் ............