கலைக்க முடியாத ஒப்பனைகள்

நம்பிக்கையின் ஒளியாய்
விமர்சிக்கும் வழியாய்
இறுதியை உறுதி செய்யும்
வித்தையும் எனக்குண்டு

விழுதுகளை பழுது பார்க்கும்
பாத்திரம் என்னிடம்
பலகால பாசாங்கில்
பரிமாற்றம் வேண்டி

உணர்வுக்கு ஊறுசெய்யா
உதவிக்கரம் நீட்டும்
ஊக்கமும் என்னுள்ளே

நிந்தனை செய்வோரை
தர்க்கிக்கும் தடயமும்
அறிவினூடே அகத்துள்ளே

பண்பென்ற பரிதவிப்பினால்
இடையினூடெ இருக்கும்
இதயமற்ற இற்றுப்போன
இறகுகளை வெட்டியெறிய
வார்த்தையின்றி வெறுமையாய்

எரிவது நெருப்பு
இறப்பது விட்டில்
விதியென்று விடுவது வினையா ?

சதி என்று தெரிந்தும்
சாட்சியைக் கொண்டு
சாதனை செய்வது முறையா ?

எரிவது நெருப்பென்று தெரிந்தும்
வீழ்ந்து சாவது விட்டில்

இடறுவது தெரிந்தும்
இதுதான் பாதை என்று போவது
ஆறாமறிவு என்று அசைபோடும் ஓரறிவு

ஒப்பனை.....
அழகிற்கு தேவையில்லை
அசலை அழிப்பதற்கு மட்டுமே ...

கற்பனை .....
வாழ்க்கை நிஜத்தில் நிர்மூலம்
கிட்டா வாழ்வை எட்டி பிடிக்க ....

எழுதியவர் : bhanukl (23-Jun-13, 4:17 pm)
பார்வை : 181

மேலே