டீக்கடை - அறிமுகம்.
டீக்கடையில நியூஸ்பேபர்க வரும். ரெண்டு மூணு பேப்பர்க கூட இருக்கும். அதுல இருக்குற விஷயங்களை படிக்கும்போதே மனசுல பல நினைப்புக ஓடும். அந்த மாதிரி ஓடுற நெனைப்புகளை எல்லாம் இங்கே கொஞ்சொ கொஞ்சொ எழுதலாமுன்னு இருக்கென். படிங்க. நல்லா இருந்துச்சுன்னா தொடர்ந்து எழுதுரென்.
இத எதுக்கு சொல்ரேன்னா…. நானு எழுதுரதுல எங்கியுமே ஒரு கோர்வை இருக்காது. அங்கங்க சிதறிப் போனது கணக்கா மேட்டரு எல்லாம் இருக்கும். எழுதுரதுல எதனாச்சும் சுவாரசியம் இருக்குதுன்னு நீங்க கருத்து சொன்னாத்தா மேற்கொண்டு எழுத மனசு வரும். அதனால இதை படிக்குரவுக எல்லாரும் எதனாச்சும் ஒரு கருத்தாவது சொல்லிப்புட்டு போனீகன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிரென்.
அதுக்காக பொழுதுபோக்குக்காக எழுதுரென்னு நினைச்சுப்புடாதீக…. சில சமயம் எழுதுர விஷயங்க ரொம்ப டீப்பா இருக்கவும் செய்யுன்…. அதுனாலதா இந்த டீக்கடைன்னு தலைப்பு.
இது சும்மா இன்ட்ரொ தா… ஆக்சுவல் விஷயம் அடுத்த பகுதியில இருந்துதா தொடங்கலாமின்னு இருக்கென்.
பாமரன் – இந்த பெயர் ஏன்னு ஒங்க மனசுல நிச்சயொன் கேள்வி வரும். எதனாச்சும் ஒரு பேரு வேணுமே அதுவு மனசுல நிக்கிர மாதிரி பேரு இருக்கணுமே… அதுனாலதா இந்த பேர செலெக்ட் செஞ்சென். மத்தபடி எதுவும் எக்ஸ்ட்ரீம் யோசனை எல்லாம் வேணாமுங்க. இன்னொரு காரணம் சொல்லணுமின்னா, பேச்சுத் தமிழ்ல என் எழுத்து நடைய கொண்டு போரதுக்கு இது வசதியா இருக்குமேன்னுதா இந்த பேரு. ஏதோ ஒரு உருப்பிடியான காரணத்தை என் பேரு செலெக்ஷனுக்கு சொல்லிப்புட்டேனு நினைக்கிறேன்.
அப்புறம் நான் எழுதுர விஷயங்களை படிச்சுட்டு, நானு ஏதோ ரொம்ப படிச்சவன்னு நெனைச்சுப்புடாதீக…… எட்டாங்கிளாஸ்ல ரெண்டு வாட்டி பெயிலாயிப்புட்டு, பத்தாங்கிளாஸ்ல அட்டெம்ப்ட்டு. எப்பிடியோ 12ஆங்கிளாஸ பாதியோட விட்டுப்புட்டு எங்கியாச்சு வேலை கெடைக்குமான்னு தேடிக்கிட்டு இருக்கே…. எதனாச்சும் செக்யூரிட்டி வேலை இருந்தா கூட செஞ்சிப்புடலாமின்னு பாத்தா அதுவுங் களுதை கிடைக்காம உதைக்குது…. சரின்னு டீ சாப்பிட வந்தா நியூஸ் பேப்பரை பாக்கும்போதே பல நெனைப்புக நெஞ்சில ஓடுது…. கண்டதையும் கெட்டதையும் மனசுல ஓட விட்டு கவலைப்பட்டுக்கிட்டு இருக்குறதுக்கு பதிலா, களுத பேப்பரை படிக்கும்போதே மனசுல ஒடுர விஷயங்களை எழுதி கொஞ்சொ மனச தேத்திக்குவோமென்னுதான் எழுத ஒங்காந்தென்.
படிச்சுப்பாருங்க…. நல்லா இருந்திச்சுன்னா மேற்கொண்டு இதையே செய்யலாமின்னு ஒரு யோசனைலதா இருக்கென்….. பாப்பம்…. இது எப்பிடி வருதுன்ன்னு…..
தமிழ்நாட்டில சீக்கிரமா முன்னுக்கு வரணுமின்னா, எதயாச்சும் பத்தி, யாரையாச்சும் பத்தி அக்குவேரா, ஆணிவேரா அலசி, தாக்கிப் பேசிப்புட்டா நாமதா கிங்…. இத கொஞ்சமா தெரிஞ்சு வெச்சிக்கிட்டு இருக்கே. அதை ஃபாலோ பண்ணியே முன்னுக்கு வந்திர்லாமின்னு இருக்கே. அதா இந்த எழுத்துப் பயணமின்னு வெச்சிக்கிருங்களே… அதுல எல்லாத்தையும் பத்தீ தாருமாரா கிழிச்சி எழுதியே பேரு வாங்கப்போறேன்…..
அப்ரொன் பாக்காலாமா… ஒரு புது விஷயத்தோட வாரென்…..
உங்க பாமரன்….