............மாயக்கட்டு.........

அந்திநேரம் சந்தித்து,
சிந்தனை பறிமாறுதல்,
எங்கள் வழக்கம் !
ஏதாவது ஒருநாள்,
அவள் வரத்தவருகையில் !
காத்திருக்கும் நேரம் நெடுகி,
தலையில் கவிழும் இருள்,
புகுந்து நிறைகிறது மனதில் !
அப்போது பிணைகிறது,
உயிருக்குள் ஒரு மாயக்கட்டு !
அது அவிழ்வதேயில்லை,
அவளை அடுத்தமுறை சந்திக்கும்வரை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Jun-13, 9:47 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 54

மேலே