கல்கி

பிறப்பிலும் இறப்பிலும்
கல்வியிலும் குத்திக் கொல்வதிலும்
சண்டையிலும் வெட்டிச் சாவதிலும்
காதலிலும் அதன் லீலையிலும்
மாதுப் கேட்கும் அந்தரங்க ஏக்கத்திலும்
தாழ்த்தி மகிழும் சுட்டெறிக்கும் உணர்விலும்
கலவிலும் தகாத புணர்ச்சியிலும்
இழிவதிலும் சொல்லால் அடிப்பதிலும்
பறை சாற்றுவதிலும் நாறிப் போவதில்லும்
துரோகத்திலும் தோழமையைக் கெடுப்பதில்லும்
மட்டாய் நட்டிலழந்துப் போன
பாவப்பட்ட ஜென்மம் !!!
நல்லவன் முன் கெட்டவனாய் உருவெடுக்கும் நேரம் !!!
முற்றிலும் சாபம் கொண்ட புரியாத ஜென்மம் !!!
மானிடன் தேர்ந்தவற்றை சொல்ல மொழியில்லை ...
தேர்ந்தவற்றில் பாதி தீயவையென சொல்வதில் பெருமிதம் இல்லை ...
இந்த நாள் இந்த கனம் வேண்டுகிறேன்
அவதாரங்கள் பல...
அதிலொன்று எழ....

ஆண்டவன் இன்னும் தேர்ந்தவன்
மானிட வரம் எறிந்தொழிவதை எண்ணி
அன்றே தீர்மானித்தான் விஷ்ணுதேவன்
நல்லதோர் அவதாரம்
படைத்தான்
தசாவதாரத்தில் ஒன்றாய்
தோற்றுவித்தான்
அதற்கு மும்முறை பெயரும்
மொழிந்தான்

கல்கி ! கல்கி ! கல்கி !

எழுதியவர் : பிரதிப் (24-Jun-13, 10:13 pm)
சேர்த்தது : Prathip Parthypen
பார்வை : 155

மேலே