21) நினைத்தேன் எழுதுகிறேன்......

அமரர் ஊர்தி முதல் வானூர்தி வரை சொந்த தேவைக்காக பயணிக்கும் வாய்ப்பை இந்த பெங்களுரு எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது, 1994 ஆம் வருடம் இங்கு தனியாக வந்த புதிதில் ஜீவன காரியத்தில் சிரமம் ஏற்பட்டபோதிலும், பிறகு ஏற்ற / இறக்கங்களை சந்தித்தபோதும், ஒரு நாள் திடீர் என்று வேலை செய்த நிறுவனம் மூடிவிட்ட போதும், பெங்களுரை விட்டு வெளியேற நினைத்தது இல்லை, அப்படியே சந்தர்ப்ப வசத்தால், வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேர்ந்தாலும் சுவற்றில் அடித்த பந்து போல பெங்களுருக்கு திரும்பி இருக்கிறேன், நிற்க,

சுமார் மூன்றரை வருட கால இடைவெளிக்கு பிறகு 15-12-2012 சனிக்கிழமை பெங்களுரை விட்டு ஒருநாள் பயணமாக திருச்சூர் தொடர் வண்டியில் பயணிக்கிறோம், அந்த நேரத்தில் தம்பி நிலா சூரியன் அலைபேசியில் அழைத்தார், அவரிடம் பேசி முடித்த பின்பு நண்பர் திரு கோவை ஆனந்த் அவர்களை மறுநாள் ஞாயிறு மாலை சந்திக்க விரும்பி நேரம் கேட்கிறேன், பிறகு அவருடைய சந்திப்பு உறுதி ஆன திருப்தியில் தொடர் வண்டியில் நித்திரைக்கு சென்றேன், நடு நிசி நேரம் கண் விழித்து பார்த்தேன் அப்போது ஒரு நடு வயதை கடந்தவர் என்னையே பார்த்துகொண்டிருந்தார் அவர் அந்த பெட்டியில் பயணம் செய்ய அனுமதி பெறாதவர் என்பதை அவர் நின்று கொண்டு பயணிப்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன், பிறகு அவரிடம் நிதானமாக பேச்சு கொடுத்து யார், என்ன போன்ற விசயங்களை விசாரித்தேன், அவர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வேலை செய்வதாக சொன்னார், பிறகு பொதுவான விசயங்களை பற்றி பேசிவிட்டு நான் நம்ம பொள்ளாச்சி அபி அவர்களின் இயற்பெயரை சொல்லி என் நண்பர் என்றேன், உடனே அவரும் சொல்லி வைத்தாற்போல் நம்ம அபியின் சொந்த ஊரின் பெயரை சொல்லி தனக்கும் தெரியும் என்று கூறினார்,. பிறகு மறுநாள் திருச்சூர் பக்கம் கொஞ்சம் வேலைகளை முடித்து விட்டு கோவைக்கு புறப்பட்டோம் மாலையில் எங்களுக்காக திரு.கோவை ஆனந்த் காத்திருந்து வரவேற்று உபசரித்து அன்று இரவு பெங்களுருக்கு வழியனுப்பி வைத்தார் (இவர் நாங்கள் குடும்பத்துடன் சந்தித்த முதல் எழுத்து நண்பர் - நன்றி எழுத்து.காம்) - தொடரும் எண்ணம் உண்டு .. நேரம், காலம் கைகூடும் என்ற நம்பிக்கையுடன்... நன்றி மு.ரா.

எழுதியவர் : மு.ராமச்சந்திரன் (மு.ரா) (29-Jun-13, 11:57 am)
பார்வை : 197

மேலே