உறவு!!!
ஒரு உறவுக்கான
காரணம் தெரியவில்லை...
அதை வெறுத்திட
மனதும் விரும்பவில்லை...
வேண்டாம் என்று மனம்
ஒதுங்க நினைத்தாலும்,
வேண்டும் என்கிறது
இதயம்...
நீயின்றி
வாழவும் புடிக்கவில்லை...
உன் நினைவின்றி
வாழவும் தெரியவில்லை...
எத்தனை முறை அழுதாலும்,
என் கண்ணீர் வற்றவில்லை...
எனக்காக நேசிக்கவில்லை
உன்னை,
என்னுள் என் உயிராக
நேசிக்கிறேன்...
மனு கொடு இறைவா...
எனக்காக நீ சென்று...
முறையிடு இறைவா...
நான் வைத்த நேசம்
அவன் அறியாமல்
இருந்து விட கூடாதென்று...
முறையிடு இறைவா!!!...