தேடல். . .
சில நொடிகள்
உன் விழி பார்த்துவிட்டதால்,
சில நிமிடங்கள்
நினைவிழந்தேன்,
மணிக்கணக்கில்
உன்னை மட்டுமே சிந்தித்தேன்,
வாரங்களை வீணாக்கி,
மாதங்களாய் மனம் வாடி,
வருடங்களின் வருடலில்
மனம் மாறி
மணம் முடிக்க பெண் பார்த்த வேளை
அங்கு மணமகளாய் நீ. . .
மகிழ்ந்தேன். .
மனமெங்கும் மீண்டும்
உன் நினைவுகளால் நிரப்பினேன். .
ஆனால்,
சதிகாரர்கள்
ஜாதகம் சரியில்லையாம். . .
மனநிலை சரியில்லாதவர்கள். . .
மாற்றுகிறார்களாம் பெண்ணை. . .
இதோ. . .
நான் மீண்டும்
வருடங்களின் வருடல்களைத் தேடி. . .