பேனா !

பேனா !
சின்னதாம் உனக்குள்
சிறப்புகள் இருக்குது !
சிறக்கும் உன்னை
சிறகுகள் என்பேன் !

கையணைக்க உயிராவாய்
மறுத்தால் துயிலாவாய் !
அறியும் பொருள்
அகமே என்றாலும்
அடுத்தவர் அறிந்திட
வரைந்திடும் நீயோ
எந்தன் திருமுகம் என்பேன் !

வேதம் ஞானம்
விதைக்க வேண்டின்
போதை இன்றி
பிடிக்கவேண்டும் பேனா !!

பேனா
உனக்கொரு புதுமொழி !
'பேணும் நாவே ' பேனா என்றால்
ஒன்றாய் சிறப்போம்
நீயும் நானும் !

கைநாட்டும்
பையிலொரு
பேனா வைத்தே
பெருமை கொள்ளும் காலமிது !!

உழவர்களே
உங்கள் பேனா
வேதத்தை விதைக்கட்டும் !
பேதத்தை புதைக்கட்டும் !!

நட்பில் nashi

எழுதியவர் : nashe (3-Jul-13, 3:53 pm)
சேர்த்தது : mohd farook
பார்வை : 76

மேலே